செங்குன்றம் செய்தியாளர்
சினிமா இசை கலைஞர் டிரம்ஸ் சிவமணி இல்ல திருமண விழா மதுரவாயலில் உள்ள எஸ்.பி.பி. கார்டன் வளாகத்தில் நடைபெற்றது.
டிரம்ஸ் சிவமணியின் மகன் குமரன் சிவமணிக்கும் ,வி.வரதராஜன் மகள் ஹர்ஷனா விற்கும் நேற்று மாலை திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஸ்கந்தாலயா ஆலய சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இதில் ஏராளமான திரை துறையை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.