காப்பீட்டு துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்து வதை தடுத்து நிறுத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளை பங்கேற்கிறது. .

ஓய்வூதிய ஒழுங்காற்று முறை ஆணையத்தை (PFRDA) ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை தேசம் முழுவதும் அமல்படுத்த வேண்டும். தேசத்தின் எதிர்கால கல்வியை சீரழிக்கக்கூடிய, தேசத்தை கூறு போடும் தேசிய கல்விக் கொள்கை-2020ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். தேச நலன் சார்ந்த கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டும்.

எட்டாவது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் செய்வதற்கான நிதிப் பகிர்வினை மத்திய அரசு வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்திட வேண்டும்.

8 மணி நேர வேலை உள்ளிட்ட போராடி பெற்ற தொழிலாளர் களின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கல்வி மற்றும் சுகாதாரத் திற்கான நிதியை தேவைக்கேற்ப ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேச நலன் கருதி ரயில்வே, சாலை போக்குவரத்து, நிலக்கரி சுரங்கம், பிற சுரங்கங்கள், துறைமுகம், கப்பல் துறை, தபால், மின்சாரம், பெட்ரோலியம், தொலைதொடர்பு,வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளைத் தனியார்மயப்படுத்து

தலை கைவிடவேண்டும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வு குறியீட்டினை கணக்கில் எடுத்துக்கொண்டு ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஜூலை-9ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளை பங்கேற்கிறது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டச்செயலாளர் பெ.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *