சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை மாவட்டமும் விழுப்புரம் மாவட்டம் இணைந்து இன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மாபெரும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார் .
சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் விழுப்புரம் மாவட்ட செயலாளர் மன்னார் வரவேற்றனர் .
சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சிஇஓ டாக்டர் மனோகர் மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் அகமது ரியாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு மாதங்களில் சட்ட விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுவது எனவும்,டிசம்பர் மாதம் நடைபெறும் உலக மனித உரிமைகள் தினத்தில் அனைவரும் திரளாக ஒன்றிணைந்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் அனைவர் ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.