மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்திற்கு எஸ்.வி.ஜி.வி பள்ளி மாணவர்கள் வருகை தந்து நூலகத்திலுள்ள நூல்களை வாசித்தும், ஸ்மார்ட் அறையில் நூல்கள் தொடர்பான செய்திகளை பார்த்தும் மகிழ்ந்தனர்.
நகராட்சி ஆணையர் இரா.அமுதா அவர்கள் தலைமையில், நகர்மன்றத் தலைவர் மெஹரிபா பர்வின், நகர்மன்றத் துணைத்தலைவர் அருள்வடிவு ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இளம் தலைமுறை மாணவர்கள் அதிக அளவில் நூல்கள் வாசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்நிகழ்வு நடைபெற்றது மாணவர்கள் நல்ல நூல்களை வாசித்து சிறப்பாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சிறப்பு அழைப்பாளர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள் ஓய்வு பெற்ற கருவூல அலுவலர் இராஜாமணி, ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மா.மணி,எம்.சு.மணி,மரு.பமிலா.பிரபு, செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூலகர் பவித்ரா, மாரிமுத்து ஆகியோர் இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் நகராட்சி பணியாளர் திரு.ஜெயராமன் நன்றியுரை வழங்கினார்.