மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறை கேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தினார்.
மதுரை மாநகராட்சியில் நடை பெறும் முறைகேடுகளைக் கண் டித்தும், வரி விதிப்பில் முறை கேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக் கக் கோரியும் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் பெத்தானியாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது:
மாநகராட்சியில் மண்டலத் தலைவர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது , தமிழகத்தில் இதுவரை எப்போதும் நடைபெறாத நிகழ்வு. அதிமுக அறிவித்த போராட்டமே இதற்குக் காரணம். திமுக மண்டலத் தலைவர் கள் தங்களை குறுநில மன்னர்களாகக் கருதி செயல்பட்டனர்.
2022-ம் ஆண்டு முதல் மாநகராட்சியின் வரி விதிப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும். இதற்கென ஓர் குழுவை நியமிக்க வேண் டும். மாநகராட்சி வரி முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முறை கேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ராஜா, ஜெயபால், மாமன்ற எதிர்க் கட்சித் தலைவர் சோலை எம். ராஜா, விளாங்குடி 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதிசித்தன் மதுரை மேற்கு 6ம் பகுதி கல்விக் குழு உறுப்பினர் மற்றும் செயலாளர் விளாங்குடி சித்தன், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் திரளாகப் பங்கேற்றனர்.