திண்டுக்கல்லில் காப்பிட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பாக ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து தொழிலாளர் மக்கள் விரோத சட்டங்களை கண்டித்தும்
கைவிடக்கோரியும் திண்டுக்கல் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு காப்பிட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த நிகழ்வில் கோட்ட சங்கத் துணைத் தலைவர் S.A.T.வாஞ்சிநாதன் வேலை நிறுத்தத்தைப் பற்றி விளக்க உரையாற்றினார் கிளை-2 தலைவர் கே.பரத், கிளைச் செயலாளர் தங்கவேலு, கிளை-1 தலைவர் ஜான்பால் கிளை செயலாளர் ஜான்சன் மற்றும் முகவர் சங்க பொதுச் செயலாளர் முத்துசாமி, ஊழியர்கள் லியாஃபி முகவர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் -அனைவருக்கும் பழைய பென்சன் திட்டம் வேண்டும் -இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய மூலதன உயர்வைக் கைவிடவும் மற்றும் -இன்சூரன்ஸ் பிரிமியம் மீதான GST யை திரும்ப பெற வலியுறுத்தியும் மற்றும் -அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு சங்க அங்கிகாரம் வழங்க வலியுறுத்தியும் -முன்றாம் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களின் பணி நியமனம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்,