வலங்கைமான் ரோட்டரி சங்கத்தின் 2025-2026 ரோட்டரி ஆண்டின் 22- ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தென்றல் மஹாலில் வலங்கைமான் ரோட்டரி சங்கத்தின் 2025- 2026- ஆம் ஆண்டின் 22- ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக STRATERGIC COMMITEE HEAD -PUBLIC IMAGE Rtn சிவா.I. சரவணன் கலந்து கொண்டார்.
புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தல் பணிகளை துணை கவர்னர் zoone 17 Rtn. எஸ்.பஃருதீன்அலி அகமது செய்தார், 2025- 2026- ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக டி.ரவிச்சந்திரன், செயலாளராக ஜி.திருநாவுக்கரசு, பொருளாளராக கே. சரவண மூர்த்தி ஆகியோர் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கவர்னர் ஜே.லியோன், zoone செயலாளர் zoone 17, சி. செல்வகுமார், சாசன தலைவர் கோ. தெட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் நலத் திட்ட உதவிகள் ஆடு, சாலையோர கடைக்காரர்களுக்கு குடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் வி.ஆறுமுகம், டி. சுவாமிநாதன், டி.என.ஆர். கார்த்தீபன், வி. மோகன், எஸ். பஞ்சமூர்த்தி, ஜி. சத்தியமூர்த்தி, ஆர். பத்மநாபன், ஏ. அன்பு பிரபு, என். ராஜராஜ சோழன், எஸ். அருள்முருகன், மண்டல அளவிலான நிர்வாகிகள் எஸ்.செந்தில்குமார், ஜெ. கோவிந்தராஜன், க. குமரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.