ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கைதட்டி மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளர் தங்கபாண்டியன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலைமான், தலைமையாசிரியை சாந்தி, உதவி தலைமையாசிரியை பாக்கியலெட்சுமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழா முடிவில் ஆசிரியர் பொன்மாடசாமி நன்றி கூறினார். இதே போல் கமுதி -கோட்டைமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.