C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு,கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கிவைத்ததோடு,விழிப்புணர்வு பேரணியையும் துவக்கிவைத்தார்.