குறிஞ்சிப்பாடி செய்தியாளர் வீ. சக்திவேல்

புவனகிரி அருகே குடிக்க பணம் இல்லாததால் தனியாக இருந்த மூதாட்டியிடம் இரண்டரை பவுன் நகைக்காக தலையனை வைத்து , அழுத்தி கொலை செய்த பக்கத்து வீட்டு இளைஞர்

திருடிய நகையை அடகு கடையில் அடகு வைத்து குடித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் ஊருக்குள் சுற்றி வந்த இளைஞர்.

சுமார் 3 நாட்களாக பிணமாக வீட்டில் கிடந்த மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு கிடைத்த பகீர் தகவல்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே நத்தமேடு செட்டிகுளம் கிராமத்தைச் சார்ந்த சந்திரா என்ற 60 வயது மூதாட்டி தனது ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நாள்தோறும் தனியாக சமைத்து சாப்பிட்டு விட்டு தனது வாழ்நாளை கழித்து வந்துள்ளார் மூதாட்டி மூதாட்டியின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வெல்டிங் வேலை செய்து வரும் பசுபதி என்ற வயது இளைஞர் வசித்து வந்துள்ளார்

அந்த இளைஞருக்கு மூதாட்டியும் கழுத்தில் இருந்த நகை கண்ணை உறுத்தி உள்ளது எப்படியாவது மூதாட்டி இடமிருந்து நகையை பறித்து விட வேண்டுமென திட்டம் தீட்டியுள்ளார் இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி இரவு 11 மணி அளவில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த பொழுது பக்கத்து வீட்டு இளைஞர் பசுபதி என்பவன் மூதாட்டியின் வீட்டின் பின்புற வாசல் வழியாக சென்று மூதாட்டியை தலையனையை வைத்து அழுத்தி கொன்றுவிட்டு கழுத்தில் இருந்த சங்கிலி தோடு மூக்குத்தி உள்ளிட்ட இரண்டரை பவுன் தங்க நகையை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி உள்ளார்.

தங்க நகையை எடுத்துக்கொண்டு அடகு கடைக்கு சென்று அடகு வைத்து நண்பர்களுடன் குடித்து கூத்தடித்து இருக்கிறார் பசுபதி.

மேலும் மூதாட்டியை கொன்று விட்டு ஒன்றும் தெரியாதது போல் ஊருக்குள் சுற்றி வந்துள்ளார் பசுபதி. மேலும் மூதாட்டி இறந்து மூன்று நாட்களுக்கு ஆனதாக தெரிய வருகிறது இதனை அறியாத மூதாட்டியின் மகள் தீபலட்சுமி தனது தாய்க்கு செல்போன் மூலம் மூன்று நாட்களாக தொடர்பு கொண்டுள்ளார்

தனது செல்போன் தொடர்பை எடுக்காததால் சந்தேகம் அடைந்த மகள் உடனடியாக அக்கம் பக்கத்தினரை சென்று பார்க்க சொல்லி உள்ளார் அப்பொழுது மூதாட்டி இறந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார் இது குறித்து மருதூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு சென்ற காவல் துறையினர்

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர் . மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குற்றவாளியை உடனடியாக பிடிக்க உத்தரவு பிறப்பித்தார்

மூதாட்டியின் மகள் எனது தாய் அணிந்திருந்த தங்க சங்கிலி தோடு மூக்குத்தி ஆகியவற்றை காணவில்லை என கூறிய நிலையில் காவல்துறையினருக்கு மேலும் சந்தேகம் அதிகரிக்கவே நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்

இந்த நிலையில் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்த தொடங்கிய காவல்துறையினர் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பசுபதி என்ற இளைஞரை விசாரித்துள்ளனர்

அப்பொழுது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது பசுபதி பாக்கெட்டில் நகை அடகு வைத்த சீட்டும் பணமும் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது தொடர்ந்து காவல்துறையினரின் கிடுக்கு பிடி விசாரணையில் பசுபதி மூதாட்டியை தலையனையை வைத்து அழுத்தி கொன்று விட்டு நகையை எடுத்துச் சென்று அடகு வைத்து குடித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்

மேலும் நகை அடகு வைத்த கடைக்குச் சென்ற காவல் துறையினர் நகையை மீட்டு மூதாட்டியின் மகளிடம் காண்பித்து இந்த நகைதானா என்பதை உறுதி செய்தனர் இந்த நிலையில் அடகு கடைக்காரரையும் காவல்துறையினர் எச்சரித்தனர்.

மேலும் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த காவல்துறையினர் பசுபதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குடிக்க பணமில்லாமல் போதைக்காக தனது வீட்டின் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டியின் கொலை செய்து நகையே திருடிய சம்பவம் நத்தமேடு பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *