தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாசறை மாவட்ட செயலாளர் கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன் தலைமையில் நடைபெற்றது.
தேனி (கி) அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பெரியகுளம் நகர செயலாளர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு,மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வழக்கறிஞர் தவமணி, பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தவமணி கருப்பசாமி, தாமரைக்குளம் பேரூர் கழக செயலாளர் மனோகரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராம தண்டபாணி, மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், விஜய் ஆனந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் துரைப்பாண்டி, மாவட்ட மகளிர் துணை செயலாளர் பங்கஜ வள்ளி, ஒன்றிய துணை செயலாளர் சுந்தர பாண்டி, பெரியகுளம் நகர துணை செயலாளர் வெங்கடேசன், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கணேசன், நகர அம்மா பேரவை செயலாளர் ஜெயசீலன், கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உள்பட மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், இளைஞர், இளம்பெண்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.