பெரியகுளம் அருகே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடைபெற்ற மையத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள நல்ல கருப்பன் பட்டியில் அமைந்துள்ள மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி IV தேர்வு நடைபெற்ற மையங்களில் தேர்வாளர்களின் எண்ணிக்கை அடிப்படை வசதிகள் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் சென்று பார்வையிட்டார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி IV தேர்வு சனிக்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12.30.மணி வரை நடைபெற்றது இத் தேர்விற்கு தேனி மாவட்டத்தில் 108 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 158 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தனர் இவர்களில் 22 ஆயிரத்து 719 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள் இதில் 4439 தேர்வர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.