புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரிச்சி வன்னியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழாவாக மகிழ் முற்றம் மாணவத் தலைவர்களுக்கு பதவி ஏற்ப விழா, மாணவர்களுக்கு அடையாள அட்டை அணிவிக்கும் விழா, மரம் நடு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது
வட்டாரக் கல்வி அலுவலர் மெகராஜ் பானு தலைமையில் வகித்தார் .இ
ந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாரதிதாசன் முன்னிலை வகித்தார்…
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மகிழ் முற்றம் சீருடை வழங்கிய மணிகண்டன் , மாரிமுத்து, சின்னராஜ், முருகேசன், மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய காலை சிற்றுண்டி பணியாளர்கள் முத்துலட்சுமி வனிதா அவர்களை பாராட்டியும், நன்றி தெரிவித்தும் வாழ்த்தினார்.
பள்ளி மேலாண்மைக் குழுவின் கல்வியாளர் வைரக்கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்கள்.முன்னதாக தலைமை ஆசிரியர் சின்ன ராஜா அனைவரையும் வரவேற்றார்.இடைநிலை ஆசிரியர் ரமா பிரபா நன்றி கூறினார்.