கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஹாக்கி விளையாடுவதற்கான செயற்கை புல்தறை புதிய செயற்கை இலை வளைகோல் பந்து மைதானம் அமைப்பதற்கான பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்கள்
அரியலூர் விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் கலந்து கொண்டார் மாவட்ட ஆட்சித் தலைவர் இரத்தினசாமி அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் அரியலூர் நகராட்சி தலைவர் சாந்தி நகர திமுக செயலாளர் முருகேசன் அரசு வழக்கறிஞர் த ஆ கதிரவன் டாக்டர் அகமதுரபி நகராட்சி துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எல் கே அருண்ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்