கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கரூரில் ஆர்ப்பாட்டம்..
கரூர் மாவட்டம்
கரூரில் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டி கரூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சார்ந்தவர் சிவா தற்போது தனியார் தொலைக்காட்சியில் பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார் இரண்டு தினங்களுக்கு முன்பு குளித்தலை பேருந்து நிலையம் முன்பு சிவாவை மர்ம நபர்கள் நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் காயமடைந்த சிவா குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பத்திரிகையாளர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது .
தமிழ்நாடு அரசு சார்பில் திமுக ஆட்சி வந்தவுடன் முன்கல பணியாளராக தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார் 24 மணி நேரமும் அயராத உழைத்துக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் என்று அறிவித்த தமிழ்நாடு அரசு கிடப்பில் போடப்பட்ட முண்கல பணியாளராக மட்டுமே செயல்பட்டு வருகிறது. கண்துடைப்புக்கு மட்டுமே பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்தியாவில் தொடர்ந்து நான்காவது தூணாக உள்ள பத்திரிக்கையாளர்கள் தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பத்திரிக்கையாளர் தாக்கப்படும் சம்பவம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு வேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பணி பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற தாக்குதலில் ஏற்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.