சமீபகாலமாக கோவை மாநகரில் உள்ள இந்துக்களின் சுடுகாடுகள் ஆக்கிரமிக்கப்படுகின்றன சில சுடுகாடுகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க
கையகப் படுத்தப்படுகின்றன.

சொக்கம்புதூரில் இந்துக்களின் மயானம் நீண்ட வருடங்கள் ஆக அமைந்துள்ளது.
அந்த மயானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அங்கு மாபெரும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த மயானத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.மயானத்திற்கு நேர் பின்புறம் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் கல்விக்கூடம் உள்ளது.இப்படிப்பட்ட இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் அது பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும்
பெரும் நோய் அபாயத்தை உருவாக்கும். எத்தனையோ அரசாங்க நிலங்கள் காலியாக உள்ள போது மயான பயன்பாட்டிற்காக இருக்கின்ற நிலத்தை கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க ஒதுக்கியுள்ளது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செல்வபுரம் கல்லாமைடு பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்களின் மயானம் பயன்பாட்டிற்காக இருந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மயானத்துக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கியவர் மயான நிலத்தையும் ஆக்கிரமித்து அங்குள்ள 65க்கும் மேற்பட்ட கல்லறைகளை அப்புறப்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக அப்பகுதி பொதுமக்கள் திரண்டு காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் மயான ஆக்கிரமிப்பை பற்றி எடுத்துக் கூறினர்.
அந்த மயானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒரு அறையில் தனியார் கட்டிடம் கட்ட பயன்பாட்டுக்குரிய பொருள்களை அடுக்கி வைத்துள்ளனர்.

மயானத்தில் போல் இருந்த ஆறு சந்தன மரங்களை இயந்திர கருவிகள் கொண்டு அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர் இப்படி கோவையில் பல இந்துக்களின் சுடுகாடுகள் கண்முன்னே பறிபோகிறது.

எனவே இந்த இரு சுடுகாடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும்
சொக்கம்புதூர் மின்மயானத்தில் அமைய உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் கோவை மாநகராட்சி ஆணையாளரிடம் இந்து முன்னணி பேரியக்கம் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

மாநில நிர்வாக குழு உறுப்பினர் S.சதீஷ் கோட்ட பொது செயலாளர் பாபா.ஆ. கிருஷ்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் M. ஜெய்சங்கர் மாவட்ட செயலாளர்
K.மகேஸ்வரன் M.ஆனந்த் மாவட்ட செய்தி தொடர்பாளர் C..தனபால் மாவட்ட துணைத்தலைவர்கள் C.சோமசுந்தரம் உறுப்பினர்கள் பாலு வேடபட்டி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *