தேனி அருகே மதுராபுரியில் புதியதாக கட்டப்பட்ட மலர் ஹோம் சென்டர்
திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ப்யூபா (Pupa) செராமிக் இந்தியா நிறுவனத்தின் மாநில நிர்வாகி நித்யானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
ப்யூபா செராமிக் இந்தியா நிறுவனத்தின் பிரிவு மேலாளர் அருண் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.இந்த புதிய ஹோம் சென்டரில் வீடு கட்டுவதற்கு இரும்பு பொருட்கள் தவிர செராமிக், பெயிண்ட்,கிச்சன் வேர்,பாத்ரூம் வேர்,மேன்ஹோல் கவர் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் கிடைக்கும். மலர் ஹோம் சென்டர் நிர்வாக மேலாளர்கள் கெளசிக், நிலா கெளசிக், வெண்மலர், மதி சூதன் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் , சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.