பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானிசாகர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொட்டம்பாளையத்தில் வட்டார் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் மாநில எஸ் சி எஸ் டி. பிரிவு துணைத் தலைவர் காந்தி, மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொது செயலாளர் சங்கர்,மாவட்ட மீனவர் அணி தலைவர் சந்திரன் காமராஜர் அறக்கட்டளை தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலையில் பெருந்தலைவர் காமராசர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இவ்விழாவில் கவுன்சிலர்கள் வெங்கடாசலம், துரை மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்