தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை விற்பனையாளரான கேப்ஸ் கோல்ட் நிறுவனத்தின் உட்பிரிவான கலாஷா நிறுவனம், இந்திய பாரம்பரிய நகைக் கண்காட்சியை கோவையில் இன்று துவக்கியது. இந்தக் கண்காட்சி கோவை அவிநாசி சாலையிலுள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் இன்று ஜூலை 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில், பண்டிகை காலங்களுக்கு ஏற்ற நகைகளும், திருமணங்களுக்கு ஏற்ற வகையிலான கைதிறன் கொண்ட நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய பாரம்பரியத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த நகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரம் மற்றும் ஜடாவ் ஆகியவற்றால் ஆன, இந்த நகைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் எனறு கூறினால், அது மிகையாகாது.

இந்தக் கண்காட்சி துவக்க விழாவில், பிரபலமான மகளிர் தொழில்முனைவோர் மற்றும் நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர். திருமதி. காயத்ரி சுரேந்திரன் (இயக்குனர் – டெர்ன்ஸ் காயு ஹோம் ஃபுட்ஸ்), திருமதி. சுஜாதா விஜயசேகரன் (இயக்குனர் – அத்வல்த் ரியல்டி பி.வி.டி.), திருமதி. கருணாப்ரியா (தலைமை நிர்வாக அதிகாரி – எஸ்எஸ்டி கலர்ஸ்), திருமதி. சாந்தினி அனிஷ்குமார் (துணைத் தலைவர் – சுகுணா நிறுவனங்கள்), திருமதி. வள்ளிமயில் சுப்பிரமணியன் (இயக்குனர் – மிர்ராஸ் காப்பி இந்தியா பி.வி.டி.) ஆகியோர் இந்தக் கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்றனர்.

கலாஷா நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிகா சந்தா மற்றும் உரிமையாளர் ஷ்ரவன் குமார் கூடூர் ஆகியோர் கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். இந்த கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மணப்பெண் நகைத் தொகுப்பில், கோயில் நகைகள், வைரம் பதித்த நகைகள் மற்றும் பாரம்பரியம் நிறைந்த மணப்பெண் அணிகலன்கள் இடம்பெற்றுள்ளன. இந்திய கலாச்சாரத்தின் ஆழமான மதிப்பையும், பழம்பெரும் அழகிய நகை வடிவங்களையும் இந்தக் கண்காட்சி பிரதிபலிக்கிறது.

இதுகுறித்து கலாஷா நிறுவன நிர்வாகிகள் கூறியது :- இந்த நகைகள் ஒவ்வொன்றும் ராஜசிக அழகுடன் உருவாக்கப்பட்டவை. இந்திய பாரம்பரியம், கலை, கலாச்சாரம் அனைத்தையும் மையமாகக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. காலத்தால் அழியாத இந்தச் சிறப்பான நகைகளை அணிந்தால், உங்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *