மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் உங்கள் இல்லம் தேடி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த எம்பி தேனி மாவட்டம் சில்ல மரத்துப்பட்டி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி முகாமை துவக்கி வைத்தார்
இந்த முகாமில் மகளிருக்கான உரிமைத்தொகை விடுபட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தரும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று எம்பி தெரிவித்தார் அப்போது முகாமில் பங்கேற்ற மேல சொக்கநாதபுரம் பகுதியில் ஒரு நபர் ரேஷன் கார்டு முதியோர் ரேஷன் அரிசி பல மாதங்களாக வழங்காமல் உள்ளது
முதலில் அதை வழங்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது இந்த மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கத்தமிழ் செல்வன் எம்பி தெரிவித்தார் மொத்தம் 451 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் வழங்கிய அனைவருக்கும் மனு பெற்றதற்கான ரசீதுகள் வழங்கப்பட்டன முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்