நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கர்ம வீரர் கல்வி தந்தை காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வித் தந்தை கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 , 11 ,12 ஆம் வகுப்பை சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு அம்மையநாயக்கனூர் தாய்மை ட்ரஸ்ட் நிறுவனர் ஜெனகை குமரவேல் அவரது சார்பாக கேடயமும்நினைவு பரிசும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை அம்மையநாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் ஏனைய ஆசிரிய பெருமக்கள் முன்னிலையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.