அலங்காநல்லூர்
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பாலமேடு பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மதுரை கிழக்கு மாவட்ட தலைவரும் மத்திய அரசு வழக்கறிஞருமான
ஏ.பி.ராஜசிம்மன், கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருக்கு நாடார் சங்க நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர். இதில் மாவட்ட செயலாளர் ரவிசங்கர், மண்டல தலைவர்கள் முனீஸ்வரி, இருளப்பன், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் எஸ்.கே.கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, மாவட்ட செயல்குழு உறுப்பினர் குமரேசன், ஒன்றிய பொதுச் செயலாளர் சாமிகஜேந்திரன், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சித்ரா, ஒன்றிய பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் கண்ணன், முன்னால் ஒன்றிய துணை தலைவர் அழகுதுரை, விவாசயி அணி ஒன்றிய தலைவர் முருகேசன், மற்றும் சரஸ்வதி, பூமா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருகை தந்த மாவட்ட தலைவர் ராஜசிம்மனுக்கு பேருந்து நிலைய பகுதியில் பாஜகவினர் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து வரவேற்றனர்.