திருச்சி இட மலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வரலாறு கூறும் நாணயங்கள் பணத்தாள்கள் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமை வகித்தார் .

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சுடுமண் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் யூகோஸ்லாவியாவின் 500 பில்லியன் தினார் பணத்தாள் குறித்து முகமது சுபேர் பேசுகையில்,முன்னாள் யூகோஸ்லாவியாவின்
500 பில்லியன் தினார்
பணத்தாள் 1993 ஆம் ஆண்டு – யூகோஸ்லாவியா மிகை பணவீக்கத்தை எதிர்கொண்டபோது அச்சிடப்பட்டன. பொருளாதார நெருக்கடி ஒரு உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது, இறுதியில் நாடு பல சிறிய குடியரசுகளாக்கப்பட்டது என்றார்