கிருஷ்ணகிரி,ஜுலை.18- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எம். சோமசுந்தரம்,மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாவேந்திரன் ஆகியோர் புதிய ஒன்றிய செயலாளர்களாக டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.இதை தொடர்ந்து கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்புச் செயலாளராக ஜி. சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களுக்கு மாநில இளைஞர் சங்க துணை தலைவர் எம். ரங்கசாமி தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பாமக நிர்வாகிகளுடன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புச் செயலாளர் அருண், ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் திருப்பதி மற்றும் சண்முகம்,வேலு, பழனி, அன்பரசன்,சிவலிங்கம், சாமசிவம்,ஞானசேகரன், வினோத்குமார், ராஜ்குமார், சக்திவேல், பூவரசன், சூர்யா, ராஜா, குமார்,கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.