சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மறைமலை அடிகளாரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவில் மறை தி. தாயுமானவன் எழுதிய மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு எனும் நூலினை விஐடி பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்கள் வெளியிட சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் சாநவாசு அவர்கள் பெற்றுக் கொண்டார்.
உடன் சென்னை கம்பன் கழகச் செயலர் முனைவர் சாரதா நம்பி ஆரூரன், தமிழியக்க பொருளர் புலவர் வே.பதுமனார்,தமிழியக்க பொதுச் செயலாளர் கவியருவி அப்துல் காதர், நூலாசிரியர் மறை தி.தாயுமானவன், மேலாண்மை குழு உறுப்பினர்கள் முனைவர் வி.முத்து, மேனாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி