இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் காட்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது அதில் உரையாற்றிய மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் அவர்கள்

இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் இந்துக்களின் எழுச்சியையும் ஒற்றுமையையும் உருவாக்கியுள்ளது.
இதற்காக பணி செய்த அனைவரையும் மகிழ்ச்சியோடு நினைவு கூறுகிறோம்.

விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்த ஆண்டு தமிழகத்தில் வெகு விமர்சியாக கொண்டாட இந்து முன்னணி திட்டமிட்டுள்ளது சுமார் ரெண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு அந்த வாரத்தில் விசர்ஜன ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை கோவை மாவட்டம் 5001 க்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.

கோவையில் நடைபெறும் விசர்ஜன ஊர்வல பொதுக் கூட்டத்தில்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் K.அண்ணாமலை அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார் .

அரசாங்கமும் காவல்துறையும் புதிய விநாயகருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதை தவிர்த்து ஆன்மீகத் திருவிழாவான விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் பக்தியோடு கொண்டாட அனுமதிக்க வேண்டும்.

கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள இந்துக்களின் மயானத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர் தமிழகத்தில் இதேபோன்று இந்துக்களின் மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் பட்சத்தில் பொதுமக்களும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவ மாணவிகளும் கடுமையாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் வசிக்காத பகுதியில் மாறறிக் கொள்ள வலியுறுத்தியும் சொக்கம்புதூர் மயானத்தில் இதை தடை செய்ய கோரியும் வருகின்ற வெள்ளிக்கிழமை 25ஆம் தேதி அன்று காலை கோவை மாநகராட்சி முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என கூறினார்.

உடன் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் S.சதீஷ் மாவட்ட தலைவர் K.தசரதன் கோட்ட பொதுச்செயலாளர் பாபா ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட செய்தி தொடர்பாளர் C. தனபால் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *