கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16 வது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கலையரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் முனைவர் அசோக் பக்தவத்சலம் தலைமை தாங்கி பேசினார்அப்போது பேசிய அவர், ஒவ்வொரு மாணவரின் கடின உழைப்பும் பெற்றோர்கள் கே.ஜி கல்வி நிலையத்தின் மீது வைத்த நம்பிக்கையும் இந்த வெற்றியை வழங்கியுள்ளது என்று வாழ்த்தினார்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் இரத்தினமாலா கல்லூரியின் சிறந்த செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை வாசித்து வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக மணிப்பால் குழுமத்தின் பெருநிறுவன வளர்ச்சித் துறையின் முன்னாள் துணைத் தலைவரும், ஸ்டே ஸ்டில், ஸ்கேல் ஹை (Stay Still Scale High) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமாகிய நவநீதகிருஷ்ணன் சங்கரையா கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர், கல்வியின் மூலம் பெற்றுக்கொண்ட அறிவாண்மையை எதிர்கால வாழ்க்கை சிறக்க பயன்படுத்த வேண்டும் என்பதனையும், கலை அறிவியல் துறையில் சாதித்தவர்களே உலகளவில் சாதனை படைத்தவர்களாக திகழ்கிறார்கள் என்றும் எடுத்துரைத்தார்..
தொடர்ந்து நடைபெற்ற விழாவில்,1308 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார் இதில்,பதிமூன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை பயின்ற இளம் பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டு சமூகப் பொறுப்புணர்வோடும் உறுதியுடனும் செயல்படுவோம் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் கல்லூரியின் செயலர் முனைவர் வனிதா , தேர்வு கட்டுப்பாட்டுத்துறை நிர்வாக இயக்குநர் முனைவர் கவிதா, கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ராஜேந்திரன் உட்பட துறை தலைவர்கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் என பலர் கலந்ரு கொண்டனர்…