செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம்
செய்யூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் கேப்டன் விஜயகாந்த் அருளாசியுடன் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கிணங்க செய்யூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றியம் பேரூராட்சி ஊராட்சி கிளை நிர்வாகிகள் மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் சித்தாமூர் தனலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற ஒன்றியம் பேரூராட்சி ஊராட்சி கிளை பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு சுவர் விளம்பரம் ஒன்றியம் பேரூராட்சி ஊராட்சி கிளைகளில் கழக கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும்
மேலும் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது குறித்து வரும் தை பொங்கல் அன்று கழகத் தொண்டர்களுக்கு இனிப்புடன் வழங்கி அறிவிக்கப்படும் என கழக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்ததாக கூட்டத்தில் அறிவித்தனர்.

இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் கழக உயர்மட்ட குழு உறுப்பினர் அனகை டி.முருகேசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்ட தொகுதி பொறுப்பாளர் மாநில தொழிற்சங்க சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஸ்ரீ ஜெ.பெருமாள் மாவட்ட கழக துணைச் செயலாளர் செய்யூர் பொறுப்பாளர் டாக்டர் கே.நாகராஜ் உட்பட சித்தாமூர் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் ஐ.பொன்னுசாமி இராசந்திரகாந்தன் எஸ்.யுவராஜ் செய்யூர் மா.மூர்த்தி எஸ்.சேஷாத்ரி ஓ.ஆர்.வேலு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

இதில் மாவட்ட கழக பொருளாளர் இ.பிரகாசம் மாவட்டக் கழக துணை செயலாளர் ஓவியர் ஆர்.ரமேஷ்பிரபாகரன் மற்றும் சித்தாமூர் ஊராட்சி செயலர் எஸ்.ராகவன் சித்தாமூர் கிளை செயலாளர் ஆர்.வேலு கூட்டத்தில் அனைவருக்கும்
நன்றி உரை வழங்கினர். இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *