ராமநாதபுரம் மாவட்டம், கமுதி – க்ஷத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு நேற்று இரவு
முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதில் பால், பன்னீர், திருநீரு, திரவியப்பொடி, இளநீர்,மஞ்சள் உட்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.