திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுப் போட்டி நடைபெற்றது. அரசு பள்ளி மாணாக்கர்களுக்கான சிறப்பு பரிசு தொகுப்பு ரூ.2000 ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஆகாஷ்க்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக்கு பெருமை சேர்த்த ஆகாஷை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் சால்வை அணிவித்து பாராட்டினார், உடன் உதவி தலைமை ஆசிரியர் சிவக்குமார் பேச்சு போட்டிக்கு பயிற்சி அளித்த ஆசிரியர் செல்வக்குமார், இருதயராஜ், வழிகாட்டி ஆசிரியர் சுரேஷ் ஆகியோர்களை பள்ளியின் சார்பாக பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.