வேப்பூர்,
கடலூர் மாவட்டம்
வேப்பூர் ஆறுமுகம் நகரில் கடை வைத்து நடத்தி கொண்டிருப்பவர் வெங்கடேசன் (31) இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசால் மற்றும் ஹான்ஸ் விற்பனை செய்யப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரின் கடைக்கு போலீசார் சென்று சோதனை மேற்கொண்டதில் அவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா , குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது ,
இதையடுத்து குட்கா மற்றும் பான்மாசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் இதே போல் வேப்பூர் பங்களா தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா , குட்கா பொருட்கள் விற்று வந்த அப்துல் அலி என்பவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.