தேனி மாவட்டத்தில் கடும் சாரல் மழை எதிரொலி தக்காளி விலை கடும் உயர்வு தேனி மாவட்ட பகுதிகளான தேனி பெரியகுளம் சின்னமனூர் போடிநாயக்கனூர் ஆண்டிபட்டி உள்ளிட்ட நகரம் மற்றும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தொடர்ந்து கனமழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது
இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் மட்டும் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ளது இந்த நிலையில் தற்பொழுது பெய்து வரும் தொடர் சாரல் மற்றும் கன மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது
இதனால் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால் ஒரு கிலோ 40க்கு விற்ற தக்காளி இன்று கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது கன மழையால் தக்காளி பழங்களின் சேதங்களை தவிர்க்க தக்காளியில் பயிர் பாதுகாப்பு முறைகள் தொடர்பாக தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்