4வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் வார்டு மேம்பாடு நிதியில் முருகப்பா நகர் பேரூந்து நிருத்தத்தில் நிழற் கொடை அமைக்கப் பட்டது.
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு மணலி விரைவுச் சாலையில் அமைந்துள்ளது முருகப்பா நகர். இப்பேரூந்து நிருத்தத்தில் நீண்ட காலமாக பயணிகள் நிழற்குடை அமைக்கப் படாமல் இருந்தது. முருகப்பாநகர், ஜெய்ஹீந்த் நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு சிறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இப்பேரூந்து நிருத்தத்தில் காத்து இருப்பார்கள். இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாமன்ற உறுப்பினர் 2024- 25 க்கான மேம்பாட்டு நிதியில் 12 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
அதன் அடிப்படையில் பேரூந்து நிழற்கொடை அமைக்கப் பட்டு இன்று மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப் பட்டது. முருகப்பா நகர் நலச்சங்கத் தலைவர் சொக்கலிங்கம் நிழற்கொடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், வார்டு உதவி பொறியாளர் சஞ்சீவி, முருகப்பா நகர் செயலாளர் ஜார்ஜ், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியம், பகுதி செயலாளர் கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் வெங்கட்டையா உட்பட பலர் பங்கேற்றறனர்