கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலை, ஜிஎன் மில்ஸ் பகுதியில் உருவாக்கப்பட்ட, இந்த உயர்தர விற்பனை மற்றும் சேவை மையத்தை, தைரோகேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னணி தொழில்துறை வழிகாட்டியுமான டாக்டர் ஏ. வேலுமணி திறந்து வைத்தார்.
இந்த புதிய மையம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான மின்சார வாகன அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையம் வாகன விற்பனை மற்றும் சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் நேரடியாக வாகனங்களை வாடிக்கையாளர்கள் சோதித்து பார்க்கலாம்.
தற்போது, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சிம்பிள் ஒன் ஜெனரல் 1.5 மற்றும் சிம்பிள் ஒன்ஸ் எனும் இரண்டு உயர் செயல்திறன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனங்கள் அதிக ரேஞ்ச், வேகமான சார்ஜிங் திறன் மற்றும் சிறந்த பயண அனுபவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மைய துவக்க விழாவில் பங்கேற்ற சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார் கூறியது :- கோவை, தொழில்நுட்பமும், அறிவார்ந்த நுகர்வோரும் வசிக்கும் நகரமாக உள்ளது. அதனால் தான் எங்களின் சேவையை இந்த நகரில் விரிவாக்கம் செய்தோம். கோவையில் மின்சார வாகனங்கள் மீதான மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இங்கு எக்ஸ்பீரியன்ஸ் மையத்தை தொடங்குவதன் மூலம், நாங்கள் வாடிக்கையாளருடன் நேரடி உறவுகளை உருவாக்க முடிகிறது என நம்புகிறோம். என்றார்.
விழாவில் பங்கேற்ற தைரோகேர் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி பேசியதாவது :- சிம்பிள் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் தன்னிறைவு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. தொழில்நுட்பம், தொழில்திறன் மற்றும் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் இந் நிறுவனம், எதிர்கால பார்வை கொண்ட நிறுவனமாகத் திகழ்கிறது, என்றார்.