தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
கொளத்துப்பாளையத்தில் சிப்காட் தொழில் கூடங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் திருப்பூர்,
.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 70 ஏக்கர் பரப்பளவில், கடந்த 38 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நூற் பாலையில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். அதன்பின்னர் நூல் தரம் குறைந்து விட்டதாக கூறி நூற்பாலை மூடப்பட்டது. இதனால் நூற்பாலை வளாகம் புதர்களால் சூழப் பட்டு சமூக விரோதிகளின் புகலிடமாகவும், விஷ ஜந்துக்கள் வாழ்விடமாகவும் மாறிவிட்டது.
இந்த நிலையில் நூற்பாலையை மீண்டும் இயக்க வேண்டும் என தாராபுரம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நூற்பாலை வளாகத்தை தாட்கோ வசம் ஒப்படைத்து, அதில் சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்க தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டன.அதன்படி தொழிற்பேட்டை அமைக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இங்கு தொழில் கூடங்கள் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி சிட்கோ தொழிற்பேட்டை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கொளத்துப்பாளையம் பேரூராட்சி 14-வது வார்டு கவுன்சிலரும்,பா.ஜ.க தெற்கு , மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து கிராம மக்கள், நூற்பாலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டியி ருந்தனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.