கம்பம் நகராட்சியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை நகராட்சி ஆணையரிடம் நகர் மன்ற கவுன்சிலர்கள் புகார் மனு தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்றும் நகர்மன்ற நகர சபை கூட்டம் நடத்தவில்லை அதனை கூட்ட வலியுறுத்தி திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் இணைந்து நகராட்சி ஆணையாளர் உமாசங்கரை சந்தித்து மனு வழங்கினார்கள் மனுவில் கூறப்பட்டுள்ளது

அதன் விவரம் கம்பம் நகராட்சியில் 33 கவுன்சிலர்கள் உள்ளனர் இதில் திமுக 24 அதிமுக 7 காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலா ஒரு கவுன்சிலராக உள்ளோம் 10 நாட்களுக்கு முன் ரூபாய் 4 கோடி மதிப்பிலான ரோடு போடும் பணி துவங்கிய போது பழைய ரோட்டை தோண்டியும் சாக்கடை கால்வாய் அமைத்து ரோடு அமையுங்கள் என்று கூறி கவுன்சிலர்கள் ரோடு பணியை தடுத்து நிறுத்தினோம் அன்று முதல் இன்று வரை கவுன்சிலர்களுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் இடையே சுமூகமான உறவு இல்லை மேலும் கடந்த மூன்று மாதங்களாக நகராட்சி நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை.

நகராட்சி நகர் மன்ற நிர்வாகம் பொறுப்பேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த வளர்ச்சி பணியும் செய்யப்படவில்லை வளர்ச்சிப் பணிகள் வார்டுகளில் நடைபெறும் போது சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு எந்த தகவலும் தருவதில்லை வார்டுகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை சின்னமனூர் கூடலூர் அழகிய நகராட்சிகளில் அனைத்து வார்டுகளிலும் ரோடு பணிகள் முறையாக சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றனர்

கம்பம் நகராட்சியில் சாக்கடைகட்டி ரோடு போடச் சொன்னால் ரோடு போட மறுக்கின்றனர் மேற்படி நகராட்சி நிர்வாகம் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி வளர்ச்சிப் பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது

இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது ரூபாய் 58 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள் நகரில் நடந்துள்ளது பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்தல் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் கட்டுதல் வாரச்சந்தை புதுப்பித்தல் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கவுன்சிலர்களின் அனுமதி பெற்று அவர்களின் கையெழுத்து பெற்றே பணிகள் நடந்துள்ளது

நகரமன்ற கூட்டம் கடந்த மாதம் மட்டுமே நடைபெறவில்லை இந்த மாதம் இன்னும் சில நாட்களில் கூட்டம் நடத்த உள்ளோம் இவ்வாறு நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் கூறினார் நகராட்சியில் எழுந்துள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் கவுன்சிலர்களிடம் எழுந்துள்ள மோதல் ஆரோக்கியமான நிர்வாகத்திற்கு வழி வகுக்காது உடனடியாக இரு தரப்பினரும் பேசி தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை சரி செய்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நகர பிரமுகர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *