கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் வி. எஸ். அச்சுதானந்தம் மறைவையொட்டி மதுரை மாநகர் புறநகர் மார்க்சிஸ்ட் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம், மாநில குழு உறுப்பினர் விஜயராஜன் தலைமையில் நடை பெற்றது.
இதில் சி.பி.எம். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் முனியசாமி, மாநில குழு உறுப்பினர்கே.சாமுவேல் ராஜ், எஸ். பாலா, மாவட்ட செயலாளர் மதுரை மாநகர் கணேசன், புறநகர் ராஜேந்திரன், தி.மு.க. அவைத்தலைவர் ஒச்சு பாலு, காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வி. கார்த்திகே யன், ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்,செயலாளர் கே.கே.சாமி, பார்வர்டு பிளாக் சிவபாண்டியன், சி.பி.ஐ. (எம்.எல்) மாவட்ட செயலாளர் மதிவாணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் இப்ராஹிம், வி.சி.க. மாநகர் மாவட்ட செயலாளர் ப. ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.