துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி ஊராட்சி ஒன்றியம் நான்காவது வார்டில் நடு ரோட்டில் மின்கம்பம் இருக்கும் நிலையில் தார் சாலை போட்டுள்ளதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், அவசரத்துக்கு ஆட்டோ மற்றும் ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை என்றும் மின் கம்பத்தை ஓரமாக அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுரோட்டில் மின்கம்பம் நட்டது தவறா? இல்லை மின்கம்பம் இருக்கும் இடத்தில் ரோடு போட்டது தவறா..சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பார்ப்போம்..
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்