திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் வீராணம் ஊராட்சியில் படப்பக்குடி சாலையில் பல ஆண்டுகளாக பழுதடைந்த மின் கம்பம் உள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்து ஏற்படும் முன் மாற்றித் தர வேண்டும் என திருக்கரூகாவூர் மின் வாரிய அலுவலகத்தில் வலியுறுத்தி வந்தனர்.

கடந்த மாதம் புதிய மின் கம்பம் வந்து வைத்தனர். ஆனால் இன்று வரை அந்த மின் கம்பம் மாற்றி அமைக்கவில்லை. தற்போது வரை மூங்கில் முற்று கொடுத்த நிலையில் உள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தற்போது காற்றடிக்கும் நிலையில் எப்போது மின் கம்பம் முறிந்து விழந்து பெரிய விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பத்தை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.