காலம் கடந்தும் பணிநிரந்தரம் செய்வதற்கு முதல்வர் ஸ்டாலின் மனம் இறங்கவில்லையே :12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் கண்ணீர் :
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வலியுறுத்தல் :
பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வரிடம் வைக்கின்ற கோரிக்கையானது தேர்தலில் கொடுத்த திமுகவின் 181-வது வாக்குறுதியை தான்.
இதுவரை 2 லட்சம் கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டதில் சிறுதுளி ஒதுக்கி இருந்தாலே பணி நிரந்தரம் செய்து இருக்கலாம்.
ஆனால் முதல்வர் மனம் இறங்காமல் உள்ளதால் தினமும் கண்ணீர் சிந்துகின்றோம்.
10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்தபோது திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்வோம் என அப்போது நம்பிக்கை கொடுத்தவர் தான் இன்றைய முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஆனதும் பெரும் போராட்டத்திற்கு பின்னர்தான் 2,500 ரூபாய் சம்பள உயர்வு கடந்த 2024 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இதற்கே கிட்டத்தட்ட மூன்று ஆண்டு ஆகிவிட்டது.
இப்படி செய்தால் என்ன செய்வது நாங்கள்.
இந்த 12,500 ரூபாய் சம்பளத்தில் அதிலும் மே மாதம் சம்பளம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவது என வழி தெரியாமல் தவிக்கின்றோம்.
சம்பள உயர்வோடு அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடு இதுநாள்வரை என்ன ஆனது என தெரியவில்லை.
அந்த மருத்துவ காப்பீடு அமுலுக்கு வந்து இருந்தால் பல குடும்பங்கள் பயன் அடைந்து இருப்பார்கள்.
மன உளைச்சல், உடல்நலக்குறைவு, விபத்து காரணமாக சிலர் இறந்து உள்ளார்கள்.
பணிக்காலத்தில் மரணம் அடைந்த குடும்பங்களுக்கு நிவாரண நிதி எதுவுமே வழங்கப்படுவதில்லை.
பணி ஓய்வு அடைந்தவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை எதுவுமே கிடையாது.
போனஸ், வருங்கால வைப்பு நிதி போன்றவைகூட இல்லாமல் பரிதவிக்கின்றோம்.
மரணம், பணி ஓய்வு என கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் தற்போது இந்த வேலையில் இல்லை.
பணி நிரந்தரத்தை நம்பி 12 ஆயிரம் பேர் குடும்பங்கள் காத்துள்ளோம்.
திமுக ஆட்சிக்கு வர கைகொடுத்த பகுதிநேர ஆசிரியர் குடும்பங்கள் இன்று கடனோடும், கவலையோடும் கண்ணீர் விடுவதை முதல்வர் நினைத்து பார்க்க வேண்டும்.
காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் தான் இனி எஞ்சிய காலத்தை கவலை இல்லாமல் வாழ முடியும்.
அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்து பணி நிரந்தரம் செய்து வாழ்வாதாரம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மக்களோடு மக்களாக எங்களை பாருங்கள்.
எங்கள் குறைகளை கேளுங்கள்.
முதல்வராகிய உங்களை எங்களால் சந்திக்க வாய்ப்பும் கிடைக்க வில்லை.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 50சதவீதம் பெண் ஆசிரியர்கள் மற்றும் பெரும்பாலும் ஏழை தினக்கூலி விளிம்பு நிலையில் உள்ள இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை கைதூக்கி விடுங்கள், கரை சேருங்கள் என மன்றாடுகிறோம்.
15 வருடமாக தற்காலிகமாக வேலை செய்யறோம்.
எங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுங்கள்.
அதுவே ஒரு நாட்டின் அரசனுடைய கடமை.
தமிழ்நாட்டை ஆட்சி செய்கின்ற முதல்வராகிய நீங்களும் அதுபோல எங்களுக்கு நிரந்தரமான வேலையை வழங்குங்கள்.
முதல்வர் ஆணையிட்டு ஒரு கோடி மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதைப்போல், இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய ஆணையிட வேண்டும்.
முதல்வராக இருக்கின்ற நீங்கள் ஆணையிட்டால் தான் அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுத்தும் சூழல் உள்ளது.
தொகுப்பூதிய முறை கைவிடப்பட்டு,இனி காலமுறை சம்பளம் வழங்கினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களின் கவலை.
திமுக ஆட்சியில் இது ஒரு குறையாக பகுதிநேர ஆசிரியர்களிடையே பரவி வருகிறது.
கண்ணீர்விடும் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை முதல்வருக்கு கேட்க வேண்டும்.

—
சி. செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
CELL: 9487257203