மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம்
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலம் எழில் மிகு நீர் அருவிகளின் நகரமாகும் இங்கு பிரதான அருவி ஐந்தருவி பழைய குற்றால அருவி புலி அருவி தேனருவி ஆகிய அருவிகள் உள்ளன இவற்றில் தேனருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இங்கு குளிக்க அனுமதியில்லை இதே நிலையில் தற்போது குற்றாலம் சீசன் களைகட்டிய நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவிகளை நோக்கி படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது
தற்போதைய சூழ்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை குற்றாலம் புளியரை பகுதிகள் அதிக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது இங்குள்ள நீர் நிலைகள் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நிரம்பி வழிவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது
தினமும் இங்குள்ள நீர்த் தேக்கங்களான கடனாநதி கருப்பாநதி அடவியன யினார் குண்டாறு நீர்த்தேக்கம் சேர்வலார் காரையாறு ஆகிய நீர்த்தக்கங்கள் முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது வழிந்து ஓடுவது காண்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் கூறி வருகின்றனர்
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் கனமழையினால் தொடர்ந்து எட்டாவது நாளாக அனைத்து அருவிகளிலும் குளிக்க தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளின் இடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது பாதுகாப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தாலும் இந்த பகுதியில் உள்ள வாழ்வாதாரங்கள் ஆன சுற்றுலாப் பகுதிகளில் வருகை குறையும் பட்சத்தில் இப்பகுதியில் வியாபாரம் தடைபடுவதாகவும் விரைவில் கெடக்கூடிய அறியவகை பழங்களான மங்குஸ்தான் ரம்முட்டான் முள் சீதா ஸ்டார் பழம் பலா மாம்பழம் ஆகியவை வியாபாரங்கள் இன்றி கெட்டுவிடுவதாகவும் இங்குள்ள வியாபாரிகள் புகார் கூறி வருகின்றனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.