செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் ரெட்டேரியில் இருந்து விநாயகபுரம் வழியாக செங்குன்றம் செல்லும் சாலையில் லட்சுமிபுரம் பெருமாள் கோயில் தெரு உள்ளது.
இந்த தெருவின் நுழைவாயில் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது காலை அவ்வழியே வந்த குடிநீர் லாரி ஒன்று அந்த கொடிக்கம்பத்தின் மேல் உள்ள மின்சார கேபிள் மீது குடிநீர் லாரியில் உரசி கேபிள் அறுந்து கொடி கம்பத்தில் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அங்குள்ள கட்சியின் பிரமுகர்கள் இதுகுறித்து குடிநீர் வாரிய அலுவலகத்திற்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.