நகராட்சிஅறிவு சார் மையத்தை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்.
மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தை சிறுமுகை விஜயலட்சுமி பப்ளிக் ஸ்கூல் மாணவர்கள் பார்வையிட்டனர். நகராட்சி ஆணையாளர் இரா. அமுதா அவர்கள் மாணவர்களுக்கு கல்வியின் சிறப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
நூலகர் பவித்ரா மாணவர்களுக்கு புத்தகங்களை எடுத்துக்காட்டி விளக்கம் அளித்தார். கணினி தொடு திரையில் மாணவர்களுக்கு கல்வி குறித்த பாடத்திட்டங்கள், பாடல்கள் காண்பிக்கப்பட்டது.இதை மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மைதிலி மற்றும் ஆசிரியர்கள்
நகராட்சி பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்