திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமம், சண்டி ஹோமம், மஹா சங்கல்பம், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ மஹா லெட்சுமி சண்டி ஹோமம், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ மஹா லெட்சுமி விசேஷ அபிஷேகம், கோபூஜை மற்றும் ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம், பட்டுப்புடவை சமர்ப்பணம், வஸோர்தாரா ஹோமம், கடம் புறப்பாடு, கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. ‌‌

யாகசாலை பூஜைகளை சர்வசாதகம் சிவஸ்ரீ திப்பிராஜபுரம் டாக்டர் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார்(சுரேஷ்)ஆலய அர்ச்சகர் விருப்பாட்சிபுரம் சிவஸ்ரீ ஏ. குமார் சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.மாலை 6:30 மணிக்கு மகளிர்கள் கலந்து கொண்ட 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்று அம்மனுக்கு தீபாராதனை நடைப்பெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழாவில் ஆலய அறங்காவலரும், ஸ்ரீ வைத்தீஸ்வரர் நற்பணி மன்ற தலைவருமான ஆர்.சிவராமகிருஷ்ணன் துணைத் தலைவர்கள் சா.குணசேகரன், ஜெய. இளங்கோவன், கெளரவ தலைவர் ஆர். செல்வம், கெளரவ ஆலோசகர் மாஸ்டர் எஸ். ஜெயபால், செயலாளர் ஆர். ஜி. பாலா, துணைச் செயலாளர் வி.ஆறுமுகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வசந்தி பாஸ்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் ஆர்.சிவராமகிருஷ்ணன் மீனாராம் டிரஸ்ட், ஸ்ரீ வைத்தீஸ்வரர் நற்பணி மன்றம் மற்றும் விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *