கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது அரியலூர் மாவட்டம் மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் மாவட்ட பேரவை கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் நடந்தது கூட்டத்திற்கு லலிதா தலைமை தாங்கினார் மாவட்ட பொறுப்பாளர் செல்வி கலந்து கொண்டு சங்க நிர்வாக சம்பந்தமாக சிறப்பு உரையாற்றினார்
சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி வாழ்த்துரை வழங்கினார் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவர் லலிதா செயலாளர் சங்கீதா பொருளாளர் செல்வி துணைத்தலைவர்கள் சத்தியகலா சூரியபிரியா துணை செயலாளர்கள் லாவண்யா இளவரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பணி சுமையை முறைப்படுத்த வேண்டும் மாத ஊதியம் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன சங்கீதா நன்றி கூறினார்