தூண்டில்வளைவை மாற்றிஅமைக்க நாம்தமிழர்கட்சி கோரிக்கை . இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மீனவர்களுக்கான தூண்டில் வளைவு அமைப்பதில் அந்தப் பகுதி மீனவர்களிடம் அரசு ஆலோசிக்காமல் தூண்டில் வளைவு அமைத்து வருகிறது
தூண்டில் வளைவு குறுகியதாக அமைப்பதால் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது அரசு மீனவர்களிடம் கலந்து ஆலோசனை செய்து அவர்கள் தொழிலுக்கு ஏற்றார் போல் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுக்கிறது
தற்போது அமைக்கப்பட்டு வரும் தூண்டில் வளைவை நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கண் இளங்கோவன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா மற்றும் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் சென்று பார்வையிட்டனர்