கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது லிகாய் எல்ஐசி முகவர்கள் சங்கம் அரியலூர் கிளை 4வது மாநாடு அரியலூர் ஏ ஒய் எம் ஹால் நடந்த மாநாட்டிற்கு கிளைத்தலைவர் நீலமேகம் தலைமை தாங்கினார் கிளை துனை தலைவர்கள் ரவி ராஜேந்திரன் கணபதி மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
லிகாய் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று பேசினார் ஜெயலட்சுமி கலைச்செல்வி தீர்மானங்களை முன்மொழிந்தனர் பொதுச் செயலாளர் சங்கர் துவக்க உரையாற்றினார்
கிளை செயலாளர் எல் ஐ சி கிருஷ்ணன் செயலாளர் அறிக்கை வாசித்தார் கிளை பொருளாளர் செல்வராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார் செயல் தலைவர் அன்பு நடராஜன் புதிய நிர்வாகிகளை பாராட்டியும் எதிர்கால செயல் திட்டங்களை பற்றியும் விளக்கி பேசினார் புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தலைவர் நீலமேகம் செயலாளர் கிருஷ்ணன் பொருளாளர் செல்வராஜ் ஆகியோரும் மேலும் செயற்குழு உறுப்பினர்களாக 47 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் நெருஞ்சி கோரை பாஸ்கர் அனைவருக்கும் நன்றி கூறினார் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி சி ஐ டி யு மாவட்ட தலைவர் சிற்றம்பலம் எல்ஐசி அரியலூர் கிளை மேலாளர் ஜெயகண்ணன் ஆர் ஜி மணவாளன் எம். பாலசுப்பிரமணியம் தங்கராசு ஜெயக்குமார் ராஜா முனுசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கேரளாவை போல் தமிழகத்திலும் முகவர்களுக்கு நலவாரியம் அமைத்திட வேண்டும் என தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது என்பன போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது