திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு, கிளை செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய குழு எஸ். பூசாந்திரம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் எஸ். எம். செந்தில்குமார் ஒரு மாத கால வேலை அறிக்கையினை சமர்ப்பித்து பேசினார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா மாநில மாநாடு குறித்தும், இன்றைய அரசியல் நிலை குறித்தும் பேசினார்.
மாவட்ட குழு உறுப்பினர் த. ரங்கராஜன் மாவட்ட மாநாடு குறித்து பேசினார். முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.உதயகுமார் கட்சியினுடைய தியாகங்களைப் பற்றி பேசினார். கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் கே. செல்வராஜ், ஒன்றிய பொருளாளர் கலியமூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜி. ரவி, மாதர் தேசிய சம்மேளன ஒன்றிய செயலாளர் தேவிகா, தலைவர் சுதா, கண்ணையன், மருதையன், விஜயகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் பங்கு கொண்டார்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு 26- வது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 15, 16, 17, 18 தேதிகளில் சேலத்தில் நடைபெறுகிறது, அந்த மாநாட்டிற்கு வலங்கைமான் ஒன்றியத்தில் இருந்து ஜந்து பேரூந்துகள் மூலம் செல்வது என தீர்மானிக்கப்பட்டது.
- வலங்கைமான் ஒன்றிய முழுமைக்கும் புறம்போக்கில் தொடர்ந்து பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் விவசாய தொழிலாளி, சிறு, குறு விவசாயிகள் அதே இடத்தினை வகைப்பாடு மாற்றம் செய்து பட்டா வழங்கியும், ரூ.6 லட்சத்தில் தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.
- வலங்கைமான் நகர பகுதி மற்றும் கிராம பகுதியில் கோயில் மனையில் குடியிருந்து வருவோர்க்கு புதிய வாடகை முறை ரத்து செய்து, பழைய பகுதி முறையை அமல்படுத்த வேண்டும்.
- வலங்கைமான் ஊராட்சிகளில் கிராம சாலைகள் செப்பனிட வேண்டும், மின் விளக்குகள் தொடர்ந்து எரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- 100 நாள் வேலைகள் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழுமையாக வழங்கப்பட வேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற ஆகஸ்ட் 05- ந்தேதி அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- வலங்கைமான் – கோவிந்தகுடி – திருக்கருகாவூர் சாலை, கோவிந்தகுடி – வாழைப்பழக்கடை சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.