சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது மலை கிராமமாக உள்ள இந்த பேரூராட்சியில் மேகமலை ஹைவே விஸ் மகாராஜா மேட்டு இரவங்கலார் மேல்மணலார் மணலார் வெண்ணியாறு உள்ளிட்ட ஏழு மலை கிராமங்கள் உள்ளன ஐந்து பேரூராட்சியின் 15 வார்டு உறுப்பினர்களில் 10 திமுக அதிமுக 4 சுயேட்சை 1 என வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர்
இந்த பேரூராட்சியின் தலைவராக 10 ஆவது வார்டு கவுன்சிலர் இங்கர் ஷால் துணைத் தலைவராக ராணி ஆகியோர் செயல்பட்டு வந்தனர் இந்த நிலையில் இங்கர்சால் உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் ராணி தலைவர் பொறுப்பில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தார் இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி நேற்று ஹைவேவிஸ் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு பேரூராட்சியின் செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
இந்த தேர்தலில் 2 ஆவது வார்டு கவுன்சிலர் நித்திய பிரியா 15வது வார்டு கவுன்சிலர் ஹேமா ஆகியோர் போட்டியிட்டனர் இந்த போட்டியில் நித்திய பிரியா ஹேமா ஆகிய இருவரும் சம வாக்கான தலா 7 வாக்குகள் கிடைத்தன வாக்குகள் சமமாக கிடைத்ததால் யார் வெற்றி பெற்றார் என்பதை அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது
உடனடியாக தேர்தல் அலுவலர் சீனிவாசன் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு நடைபெறும் என அறிவித்தார் இதன் படி நடைபெற்ற குலுக்கலில் இரண்டாவது வார்டு கவுன்சிலர் நித்திய பிரியா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
அவருக்கு செயல் அலுவலர் சீனிவாசன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ
மகாராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற சான்றிதழ்களை வழங்கி தலைவர் பதவி சிறக்க மனதார வாழ்த்தினார்கள் இதே போல் பேரூராட்சியின் அனைத்து கவுன்சிலர்களும் தலைவர் பதவி சிறக்க வாழ்த்தினார்கள்