காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் தொழில்நுட்ப கல்லூரியில் மனிதவள கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராம்குமார் வரவேற்றார்.
காங்கயம் கல்விக்குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மகேந்திர கவுடா, தொழில்துறையில் ஏற்படும் விரைவான மாற்றங்களை விளக்கியதுடன், மாணவர்களை முழுமையான முறையில் வேலைக்கு தயார்படுத்த கல்வி நிறுவனங்கள் கையெழுத்திட வேண்டிய அவசியத்தை கூறினார்.
கருத்தரங்கத்தின் நோக்கத்தை ஆராய்ச்சி மற்றும் புதுமை பிரிவின் இயக்குனர் தங்கராஜ் விளக்கினார். முன்னணி நிறுவனங்களை சேர்ந்த பல்வேறு நிபுணர்கள், திறமை மேலாண்மை, தற்போதைய பண்பாட்டு மாற்றங்கள், தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி ஒருங்கிணைப்பு குறித்து தெரிவித்தார்கள்.
இதில் ஜோகோ நிறுவனத்தின் மனிதவள தலைவர் சார்லஸ் காட்வின், கின்ரெல் நிறுவனத்தின் உதவி இயக்குனர் வித்யா பிரபு, எச்.சி.எல். நிறுவனத்தின் மனிதவள பொது மேலாளர் காஞ்சன் கெத்கர், போஜ் நிறுவனத்தின் மனிதவள தலைவர் பிரதீப் ராஜாராம், ஹெக்சாவேர் நிறுவத்தின் பிரதான வழிகாட்டி கிருஷ்ண பாலகுருநாதன், ரெனால்ட் நிசான் டெக்னாலஜி மனிதவள பங்குதாரர் மகாலட்சுமி, வெஸ்ட்டாஸ் மனிதவள பங்குதாரர் ஜஸ்டின் சுந்தர் ஆகியோர் பேசினார்கள்.
காங்கயம் தொழில்நுட்ப கல்லூரி மென்மைத்திறன் பயிற்றுனர் மற்றும் துறை தலைவர் ஜெய்ஷிம்மா, மாணவர்களும், ஆசிரி யர்களும் வளர்ச்சி மனப்பான்மையுடன் இருப்பதன் அவசி யத்தை தெரிவித்தார்.
இதில் காங்கயம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமலிங்கம், செயலாளர் வெங்கடாச்சலம், தாளாளர் ஆனந்தவடிவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியம், ஆகியோர் பங்கேற்றார்கள். முடிவில் கணினிற் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் பிரபு ராகவேந்திரன் நன்றி கூறினார்.